இயக்குநர் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்

இயக்குநர் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்
Updated on
1 min read

மலையாளத்தில், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’, ‘ன்னா, தான் கேஸ் கொடு’, ‘சுரேஷின்டேயும் சுமலதயுடேயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணயகதா’ ஆகிய படங்களை இயக்கியவர், ரத்தீஷ் பாலகிருஷ்ணன். இவர் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் லிஜி பிரேமன், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் மோகன்லாலின், பரோஸ், ரஜினியின் வேட்டையன் படங்களில் ஆடை வடிமைப்பாளராகப் பணியாற்றியுள்ளேன். என் வேலையை அறிந்து ‘சுரேஷின்டேயும் சுமலதயுடேயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணயகதா’ படத்தில் பணியாற்ற ரத்தீஷ் பாலகிருஷ்ணன் அழைத்தார். 110 நாட்கள் பணியாற்றினேன். என்னைமனரீதியாகவும் அடிமை போல் நடத்தியும் துன்புறுத்தினார். ஈகோவால் வெறுப்புடன் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் படத்திலிருந்து விலகிவிட்டேன்.

75 சதவீத வேலைகளை செய்து கொடுத்துவிட்டு தான் வந்தேன். மே 17-ம் தேதி படம் வெளியானது. படத்தில் ஆடை வடிவமைப்பாளர் என்று வேறொருவரின் பெயரையும் உதவி என்று என் பெயரையும் போட்டு அவமானப்படுத்தி உள்ளனர். எனக்கான ஊதியத்தையும் முழுமையாக வழங்கவில்லை. படம் ஓடிடியில் வெளியாகும்போதாவது என் பெயரை ஆடை வடிவமைப்பாளர் என போட்டிருக்க வேண்டும். விருதுகளுக்கு அனுப்பப்படும்போது என் பெயர் இடம்பெற வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in