பிரமாண்ட மேக்கிங், கமல் கெட்டப்... - பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ ட்ரெய்லர் எப்படி?

பிரமாண்ட மேக்கிங், கமல் கெட்டப்... - பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரமாண்டமான காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக கமல்ஹாசனின் தோற்றத்தை ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

ட்ரெய்லர் எப்படி? - இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தின் மூலம் புதியதோர் உலகை உருவாகியுள்ளார். பிரமாண்டமான செட்டு மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன. நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது, இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப், பறக்கும் தட்டுகள், கோட்டைகள் என மேக்கிங் மிரட்டுகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. முன்னணி நடிகர்களுடன், பிரமாண்டமான மேக்கிங்கில் உருவாகியுள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டுள்ளது. படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in