“இரக்கம், கருணை இல்லாதவன்...” -  பாலகிருஷ்ணா பிறந்த நாளில் வெளியான க்ளிம்ஸ்

“இரக்கம், கருணை இல்லாதவன்...” -  பாலகிருஷ்ணா பிறந்த நாளில் வெளியான க்ளிம்ஸ்
Updated on
1 min read

சென்னை: நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 109-வது படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் ஒரே நாளில் வெளியாகின. அப்போது தமிழில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள் வெளியாகியிருந்தன. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிப்பில் ‘பகவந்த் கேசரி’ வெளியானபோது, விஜய்யின் ‘லியோ’ வெளியிடப்பட்டது.

தற்போது ‘வால்டர் வீரய்யா’ பட இயக்குநர் பாபி கொல்லி இயக்கும் புதிய படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். அவரது 109-வது படமாக உருவாகும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. படத்துக்கு தமன் இசையமைக்கிறார். பாலகிருஷ்ணாவின் 64ஆவது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

க்ளிம்ஸ் எப்படி? - வீடியோவின் தொடக்கத்தில் மகரந்த் தேஷ்பாண்டே கதாபாத்திரம், “கடவுள் எவ்வளவு இரக்கமுள்ளவராக இருக்கிறார். அவர் தீயவர்களுக்கும் வரங்களை அளிக்கிறார். இந்த தீய சக்திகளை முடிவுக்கு கொண்டுவர கருணை, இரக்கம், பச்சதாபம் இல்லாத ஒருவர் தேவை” என்கிறார். உடனே கையில் பையுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் பாலகிருஷ்ணா. மிரட்டலான பிஜிஎம் ஒலிக்கிறது. அத்துடன் க்ளிம்ஸ் வீடியோ முடிகிறது. படத்தின் வெளியிட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
க்ளிம்ஸ் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in