மோகன்லாலின் ‘லூசிஃபர் 2' படத்தில் அர்ஜுன் தாஸ்

மோகன்லாலின் ‘லூசிஃபர் 2' படத்தில் அர்ஜுன் தாஸ்
Updated on
1 min read

கொச்சி: நடிகர் அர்ஜுன் தாஸ், கார்த்தி நடித்த ‘கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’, சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ ஆகிய படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர். தனது குரலால் ஆச்சரியப்படுத்திய அர்ஜுன் தாஸ் இப்போது மலையாளத்தில் நடிக்கிறார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘லூசிஃபர்’. இதன் அடுத்த பாகம் ‘எல்2: எம்புரான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இதில் மோகன்லால், சுராஜ் வெஞ்சரமூடு, ஷான் டைம் சாக்கோ உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட வீடியோ கசிந்துள்ளது. அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in