ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘மார்டின்’ திரைப்படம் அக்டோபரில் வெளியீடு!

ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘மார்டின்’ திரைப்படம் அக்டோபரில் வெளியீடு!
Updated on
1 min read

சென்னை: ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கன்னட படமான ‘மார்டின்’ அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய்மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் தயாரிக்கும் படம் ‘மார்ட்டின்’. பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தை அர்ஜுன் இயக்குகிறார்.

கதை, திரைக்கதை ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். மணி ஷர்மா இசையமைத்துள்ளார், மேலும் கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார். படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் உதய் மேத்தா கூறுகையில்,“மார்ட்டின் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷனை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம். அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in