விரைவில் திருமணம்? - வைரலான பிரபாஸின் இன்ஸ்டா பதிவு

விரைவில் திருமணம்? - வைரலான பிரபாஸின் இன்ஸ்டா பதிவு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார். அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாக உருவாகிவருகின்றன. இப்போது கல்கி2898 ஏடி, ராஜா சாப் உட்பட சில படங்களில் நடித்து வரும் அவருடைய திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். நடிகை அனுஷ்கா உட்பட சில நடிகைகளுடன் அவரை தொடர்புபடுத்தியும் செய்திகள் வந்தன. அதை அவர் மறுத்துவந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், தன் வாழ்க்கையில் புதிதாக ஒருவர் நுழைய இருப்பதாகவும் கொஞ்சம் காத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இது, அவர் திருமணம் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கூறிவரும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in