இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

Published on

கொச்சி: இயக்குநரும் திரை எழுத்தாளருமான சங்கீத் சிவன் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 63.

மலையாள திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சிவனுக்கு சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சீவ் சிவன் என மூன்று மகன்கள். மூவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள். இதில் சங்கீத் சிவன், மலையாளத்தில் ரகுவரன் நடித்த வியூகம், மோகன்லால் நடித்த யோதா, கந்தர்வம், நிர்மயம் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்தியில் சன்னி தியோல் நடித்த ஸோர் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

மும்பையில் வசித்து வந்த சங்கீத் சிவன், உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சங்கீத் சிவனுக்கு மனைவி ஜெயஸ்ரீ, சஞ்சனா என்ற மகள், சாந்தனு என்ற மகன் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in