Published : 07 May 2024 05:46 PM
Last Updated : 07 May 2024 05:46 PM

மே 10-ல் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரீ-ரிலீஸ்!

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ஆர்ஆர்’. ராஜமவுலி இயக்கிய இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.1,100 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியானது. தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படு வரும் சூழலில் ‘ஆர்ஆர்ஆர்’ படமும் வரும் 10-ம் தேதி மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் சில, பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானவை. ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x