‘மஞ்ஞும்மெல் பாய்ஸ்’ சவுபின் சாஹிருக்கு முன் ஜாமீன்

‘மஞ்ஞும்மெல் பாய்ஸ்’ சவுபின் சாஹிருக்கு முன் ஜாமீன்
Updated on
1 min read

கொச்சி: சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப். 22-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், 'மஞ்சும்மள் பாய்ஸ்'.சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகர்சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனியுடன் இணைந்து தயாரித்தார். இந்தப் படத்துக்கு, தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் பகுதியை சேர்ந்தசிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டது. இவர்கள் மீது மரடு பகுதி போலீஸ்ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி கேரளஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் வரும் 22-ம் தேதி வரை அவர்களை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in