

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர்நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகிவருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், இப்படத்துக்காக கர்நாடக மாநில கடற்கரை நகரான குந்தாபுராவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்படுகிறது. 40 ஆயிரம் சதுர அடியில்உருவாகும் இந்த செட்டுக்காக மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் பகுதிகளில் இருந்து சுமார் 600 கார்ப்பென்டர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு 20 நாட்கள் முக்கியகாட்சியை படமாக்க உள்ளனர். இதில் நடிக்க இருப்பவர்கள் சிறப்புப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.