வங்க மொழியில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் ‘புஷ்பா 2’

வங்க மொழியில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் ‘புஷ்பா 2’
Updated on
1 min read

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த 2021-ம்ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

பான் இந்தியா முறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘புஷ்பா- தி ரூல்’ என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாவதுதான் வழக்கம். ஆனால், இந்தப் படத்தை வங்க மொழியிலும் வெளியிட உள்ளனர். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் வங்க மொழியில் நேரடியாக வெளியாகும், முதன் பான் இந்தியா படம் என்ற பெருமையை இந்தப் படம் பெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in