

சென்னை: நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, ட்ரலலலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
“புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். எதார்த்தமான, உண்மையான, உலகளாவிய கதைகளைச் சொல்ல விரும்பும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கமாக தொடங்கி இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் பிறந்த தினத்தை முன்னிட்டு தயாரித்து நடிக்கும் ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமந்தா, கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். படத்தை இயக்குபவர், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்படக் குழுவினர் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.