ரூ.150 கோடி வசூலை எட்டியது பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’

ரூ.150 கோடி வசூலை எட்டியது பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’

Published on

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படுகிறது. கடந்த மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 25 நாட்களை கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை எட்டியுள்ளது.

இடையில் கேரள தயாரிப்பாளர்களுக்கும் பிவிஆர் நிறுவனத்துக்கும் மோதல் வெடித்தது. இதனால், இப்படமும் பிவிஆர் திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து உடன்பாடு எடப்பட்டு தற்போது திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுகொண்டிருக்கிறது.

முன்னதாக இந்த ஆண்டில், ‘பிரம்மயுகம்’, ‘பிரேமலு’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலைத்தாண்டிய நிலையில், அந்த வரிசையில் ‘ஆடுஜீவிதம்’ ரூ.150 கோடி வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in