“வெற்றியை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை” - ராஷ்மிகா மந்தனா 

“வெற்றியை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை” - ராஷ்மிகா மந்தனா 
Updated on
1 min read

சென்னை: “உங்களுடைய கரியரில் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி என எது வந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் நான் இத்தனை வருடங்களில் கற்றுக் கொண்டேன்” என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “என்னைவிட அழகான, திறமையானப் பல பெண்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர்களை எல்லாம் தாண்டி நான் இங்கு இருக்கிறேன். அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதே சமயம் என்னுடைய பெஸ்டைக் கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். உங்களுடைய கரியரில் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி என எது வந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் நான் இத்தனை வருடங்களில் கற்றுக் கொண்டேன்” என்றார்.

மேலும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “உங்களுக்கு புகழ் வர வர நீங்கள் செய்யும் எந்தவொரு விஷயத்தை வைத்தும் உங்களை மதிப்பிடுவார்கள். விமர்சிக்கவும் செய்வார்கள். இது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், நீங்கள் வலிமையானவராக இல்லாவிட்டால் இந்த விஷயம் உங்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும்.

ஆரம்பத்தில் நானும் இதுபோன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்டேன். ஆனால், இப்போது அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். தேவையில்லாத விமர்சனங்களை சொல்பவர்கள் பிறர் மனம் எந்த அளவுக்கு புண்படும் என்பதை நினைத்துப் பார்ப்பதே இல்லை” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in