அபர்ணா தாஸுக்கு திருமணம் - ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடிக்கிறார்!

அபர்ணா தாஸுக்கு திருமணம் - ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடிக்கிறார்!
Updated on
1 min read

சென்னை: நடிகை அபர்ணா தாஸுக்கும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தீபக் பரம்போலுக்கும் இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அவர்களின் திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘ஞான் பிரகாஷன்’ (Njan Prakashan) படம் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அடுத்து அவர் ‘மனோஹரம்’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் நடித்த ‘பீஸ்ட்’, கவினின் ‘டாடா’ படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இவருக்கும் மலையாள நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தீபக் பரம்போல். இவர் அண்மையில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் சுதி கதாபாத்திரத்தின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார்.

அபர்ணாவும், தீபக்கும் இணைந்து ‘மனோஹரம்’ படத்தில் நடித்திருந்தனர். இருவரின் காதலுக்கு ஆரம்ப புள்ளியாக இப்படம் அமைந்தது. இந்நிலையில், பல வருடங்களாக காதலித்து வந்தவர்களின் திருமணம் இம்மாதம் 24-ம் தேதி கேரளாவின் வடக்கஞ்சேரியில் திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பான திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in