‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலை வியந்து பாராட்டிய சிரஞ்சீவி

‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலை வியந்து பாராட்டிய சிரஞ்சீவி
Updated on
1 min read

ஹைதராபாத்: தமிழகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூப் சேனலான ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’-ஐ தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “நான் என்னுடைய வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்டவர்களுடன் மீட்டிங்கில் இருந்தேன். நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கொஞ்சம் டெக்னிலாக பேசினார்கள். எனக்கு அது புரியவில்லை. அவர்கள் பவர் பாயின்ட் ப்ரசன்டேஷனை காண்பித்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஆனால் நான் என்னுடைய மொபைல் போனில் என் மகள் சொல்லிய ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற தமிழத்தைச் சேர்ந்தவர்களின் யூடியூப் சேனலை பார்த்துக்கொண்டிருந்தேன். ‘எல்லோரும் வாங்க ஆல்வேஸ் வேல்கம்ஸ் யூ” என்ற அவர்களின் அந்த வரவேற்பு நன்றாக இருந்தது.

அவர்கள் சமைத்துக் கொண்டிருந்ததை நான் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால், என்னுடைய குழுவினர் நான் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்துக்கொண்டிருந்தனர்” என அவர் சொல்லியது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

இதைத் தொடர்ந்து அந்த சேனலின் அட்மின் மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியன் வேலுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஒரு பெருமையான தருணம். எங்களை பெருமைபடுத்தியதற்கு நன்றி சார்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in