கார் விபத்தில் சிக்கிய ‘ஜவான்’ பாடகி

கார் விபத்தில் சிக்கிய ‘ஜவான்’ பாடகி
Updated on
1 min read

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு பின்னணி பாடகி, மன்ங்லி. இவர் 'புஷ்பா' படத்தில்இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை, படத்தின் கன்னடப் பதிப்பில் பாடி பிரபலமானவர். தெலுங்கில் பல பாடல்களைப் பாடியுள்ள இவர், ஜவான் படத்துக்காக அனிருத்துடன் இணைந்து, ‘வந்த இடம்’ என்ற தமிழ்ப் பாடலை பாடியிருந்தார். மைக்கேல் உட்பட சில தமிழ்ப் படங்களில் பாடியுள்ள இவர், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆன்மிக விழாவில் பாடல் பாடிவிட்டு காரில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொண்டபள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் மன்ங்லியும் அவருடன் வந்தவர்களும் லேசான காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவ மனைக்குச் சென்று முதலுதவி பெற்றனர். இந்தவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், லாரி டிரைவரை கைதுசெய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in