

ஹைதராபாத்: நடிகர் நானி, ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் ஆக. 29-ம் தேதி வெளியாகிறது. இதை டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கின்றனர்.
இதே நிறுவனம் நானி நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரிக்கிறது. நானியின் 32-வது படமான இதை ‘சாஹோ’ இயக்குநர் சுஜீத் இயக்க இருக்கிறார். சுஜித் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.
ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை என்று படக்குழு தெரிவித்துள்ளது.