எஸ்.ஜே.சூர்யா - நானி காம்போ: ‘சூர்யாவின் சனிக்கிழமை’ கிளிம்ஸ் எப்படி?

எஸ்.ஜே.சூர்யா - நானி காம்போ: ‘சூர்யாவின் சனிக்கிழமை’ கிளிம்ஸ் எப்படி?
Updated on
1 min read

சென்னை: தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை அவரது பிறந்த நாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது.

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் அடுத்த படத்துக்காக கைகோக்கிறார். இந்தத் திரைப்படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கிளிம்ஸ் எப்படி? - வழக்கமான தெலுங்கு வெகுஜன சினிமாவுக்கான ஆக்‌ஷன், அதிரடி இன்ட்ரோ, பில்டப் காட்சிகளால் கிளிம்ஸ் அலங்கரிக்கப்பட்டுள்ளது. “கோபம் பல மாதிரி. ஒவ்வொருவரின் கோபம் ஒரு மாதிரி. ஆனால் அந்தக் கோபத்தை கட்டம் போட்டு கணக்கு போட்டு, வாரத்தில் ஒருநாள் மட்டும் காட்டும் முட்டாளை பார்த்திருக்கிறீர்களா?” என்ற வசனம் படத்தின் ஒன்லைன் என்பது தெரிகிறது. ஜேக்ஸ் பிஜாயின் மாஸான பின்னணி இசையும், இறுதியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் ‘ஹாப்பி பர்த்டே பிரதர்’ என வசனமும் கவனிக்க வைக்கிறது. கிளிம்ஸ் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in