

நடிகை அஞ்சலி, தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடித்து தெலுங்கில் வெளியான ஹாரர் படம், ‘கீதாஞ்சலி’. இதன் அடுத்த பாகம் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ என்ற பெயரில் இப்போது உருவாகியுள்ளது. இதில் சீனிவாஸ் ரெட்டி, சத்யா, பிரம்மாஜி, ராகுல் மாதவ், ரவிசங்கர், ஆலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோனா பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் கோனா வெங்கட் தயாரிக்கிறார். சிவா துர்லபதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீசரை மயானத்தில் வைத்து வெளியிட உள்ளனர். இன்று மாலை ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் மயானத்தில் இந்த வெளியீட்டு விழா நடக்கிறது. இது திகில் படம் என்பதால் இவ்வாறு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. டீசர் வெளியீட்டு விழாவை மயானத்தில் நடத்துவது இதுவே முதன்முறை