நாக சைதன்யாவை பிரிந்த ஆண்டு கடினமாக இருந்தது: சமந்தா

நாக சைதன்யாவை பிரிந்த ஆண்டு கடினமாக இருந்தது: சமந்தா
Updated on
1 min read

ஹைதராபாத்: நடிகை சமந்தா தசை அழற்சி நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், விரைவில் நடிப்புக்குத் திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதோடு, உடல் ஆரோக்கியம் குறித்த போட்காஸ்ட் ஒன்றை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தசை அழற்சி நோய் கண்டறிவதற்கு முந்தைய ஆண்டு, எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றி அவர் கூறியுள்ளார். இந்த நோய் பாதிப்புக்கு ஒரு வருடம் முன்புதான் சமந்தா, கணவர் நாக சைதன்யாவைப் பிரிந்திருந்தார். இதுபற்றி நாகசைதன்யாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ள அவர்,"தசை அழற்சி பிரச்சினை ஏற்படுவதற்கு முந்தைய ஆண்டு நினைவிருக்கிறது. அது எனக்கு கடினமான ஆண்டு. நானும் என் நண்பர் ஹிமாங்கும் மும்பையிலிருந்து திரும்பி வந்தோம். ‘நீண்ட நாள்களாகவே நிம்மதியாகவும் அமைதியாகவும் நான் இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். நன்றாகச் சுவாசிக்க முடிவதை உணர்கிறேன். இனி என் வேலைகளில் கவனம் செலுத்த முடியும்’ என்று அவரிடம் கூறியது நினைவில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in