‘கேரள தியேட்டர்களில் பிப்.22 முதல் மலையாள படங்கள் திரையிடப்படாது’ என அறிவிப்பு

‘கேரள தியேட்டர்களில் பிப்.22 முதல் மலையாள படங்கள் திரையிடப்படாது’ என அறிவிப்பு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: மலையாள படங்கள் விதிகளை மீறி முன்கூட்டியே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-ம் தேதி முதல் மலையாள படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது என கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மலையாள படம் திரையரங்குகளில் வெளியான பின் 42 நாட்களுக்குப் பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என ஒப்பந்தம் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பாளர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. திரையரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த கே.விஜயகுமார், “தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகின்றனர்.

ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக நாங்கள் இந்த முடிவை எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வரும் பிப்ரவரி 22 (வியாழக்கிழமை) முதல் மலையாள படங்கள் திரையரங்குகளில் திரையிடப் படாது” என தெரிவித்துள்ளார். இதனால், மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சவுபின் சாகிரின் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ (Manjummel Boys) படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in