5 படங்களை தயாரிக்கும் ‘கப்ஸா’ இயக்குநர்

5 படங்களை தயாரிக்கும் ‘கப்ஸா’ இயக்குநர்
Updated on
1 min read

பெங்களூரு: கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ரேயா, சுதீப் உட்பட பலர் நடித்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம், 'கப்ஸா'. இதை ஆர்.சந்துரு இயக்கி இருந்தார். இந்நிலையில் இதன் 2-ம் பாகம் உட்பட 2 படங்களை இயக்க இருக்கிறார். ஆர்.சந்துரு.

இவருடைய ஆர்.சி. ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரபல இந்தி தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் 'கப்ஸா 2 ' படத்தை தயாரிக்கிறார். அவரது இயக்கத்தில் 'ஃபாதர்', 'பி ஓ கே', 'ராம பாணசரிதா', 'டாக்' ஆகிய படங்களும் உருவாக இருக்கின்றன. இதை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கிறார்.

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படங்கள் பான்இந்தியா முறையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் உருவாக இருக்கிறது.

இதற்கான அறிமுக விழா பெங்களூரில் நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர் உபேந்திரா, கிச்சா சுதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in