தங்க நகை சர்ச்சை: சுரேஷ் கோபி விளக்கம்

தங்க நகை சர்ச்சை: சுரேஷ் கோபி விளக்கம்
Updated on
1 min read

கொச்சி: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவர் மகள் பாக்யாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் பாக்யா அணிந்திருந்த நகைகள் குறித்த சர்ச்சை எழுந்தது. அந்த நகைகள் சுரேஷ் கோபிக்கு அரசியல் ரீதியாக அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்றும், அவற்றுக்கு முறையாக வரி கட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு சுரேஷ் கோபி பதில் அளித்துள்ளார். அதில், “என் மகள் அணிந்திருந்த நகைகள் குறித்து சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற தகவல்கள் பரவிவருகின்றன. அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வாங்கப்பட்டவை. அதை நாங்களும் பாக்யாவின் தாத்தா, பாட்டியும் பரிசாகக் கொடுத்துள்ளோம். இதில்சிலவற்றை சென்னை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவடிவமைப்பாளர்கள் செய்தனர். அதனால் தேவையில்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் சீண்டிப் பார்க்க வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in