காதலரை மணக்கிறார் நடிகை சுவாசிகா

காதலரை மணக்கிறார் நடிகை சுவாசிகா
Updated on
1 min read

கொச்சி: தமிழில், கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை சுவாசிகா. இப்போது ‘லப்பர் பந்து’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர், மாடலும் நடிகருமான பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ‘மனம் போல மாங்கல்யம்’ என்ற மலையாள சின்னத்திரை தொடரில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 26-ம் தேதி திருவனந்தபுரத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. கொச்சியில் 27-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in