அடுத்த மாதம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

அடுத்த மாதம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

Published on

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர், ‘கீத கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி பேசப்பட்டது. இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் இதுபற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் அதுபற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளியை ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் ராஷ்மிகா கொண்டாடினார் என்றும் கூறப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையிலேயே சிறந்தது. விரைவில் அறிவிக்கிறேன்’ என ஆணும் பெண்ணும் கைகோத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார் விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் இரண்டாவது வாரம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை விஜய் தேவரகொண்டா தரப்பில் மறுத்துள்ளனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in