‘சலார்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு

‘சலார்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு

Published on

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘சலார் பார்ட் 1: சீஸ்பயர்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இந்தப்படம் டிச.22-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் நாளிலேயே அதிகப் பட்ச வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படம் 17 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில்,விஜய் கிரகந்துர், பிரசாந்த் நீல், பிருத்விராஜ், பிரபாஸ் உட்பட படக்குழு வினர் கலந்து கொண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in