ஷைன் டாம் சாக்கோ நிச்சயதார்த்தம்

ஷைன் டாம் சாக்கோ நிச்சயதார்த்தம்
Updated on
1 min read

கொச்சி: பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர், இப்போது ஜுனியர் என்.டி.ஆரின் பான் இந்தியா படமான ‘தேவரா பார்ட் 1’, மலையாள படங்களான ‘நடிகர் திலகம்’, ‘தங்கமணி’ படங்களில் நடித்து வருகிறார்.

ஷைன் டாம் சாக்கோ நிச்சயதார்த்தம்இவர் பிரபல மாடல் தனுஜாவை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 1-ம் தேதி கேரளாவில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in