ஆஸ்கர் விருது ரேஸில் மலையாள படம் - ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ போட்டி!

ஆஸ்கர் விருது ரேஸில் மலையாள படம் - ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ போட்டி!
Updated on
1 min read

திருவனந்தபுரம்: ஆஸ்கர் விருதுக்கான ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவில் மலையாள படமான ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ (The Face of the Faceless) தகுதிச்சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு (The Film Federation of India) அறிவித்திருந்தது. இந்நிலையில், வின்சி அலோஷியஸ் நடிப்பில் வெளியான ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘Barala Tribal’, ‘Ek Sapna Mera Suhana’, ‘Jalta Hai Suraj’ ஆகிய பாடல்கள் ஆஸ்கர் விருதின் ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவுக்கான தகுதிச் சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளன.

இதனை படத்தில் நடித்த வின்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஷைசன் பி ஓசெப் (Shaison P Ouseph) இயக்கியுள்ளார். அல்ஃபோன்ஸ் ஜோசஃப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in