ராஷ்மிகாவை பின் தொடரும் 4 கோடி ரசிகர்கள்

ராஷ்மிகாவை பின் தொடரும் 4 கோடி ரசிகர்கள்
Updated on
1 min read

நடிகை ராஷ்மிகா மந்தனா , இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள் ஃபிரண்ட் படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் அவர் நடித்துள்ள இந்தி படமான ‘அனிமல்’ கடந்த 1-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதில் அவர் கீதாஞ்சலி என்ற கேரக்டரில் இரண்டு குழந்தைக்குத் தாயாக நடித்திருந்தார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கிலும் வெளியான இந்தப் படம் வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 மில்லியனை அதாவது 4 கோடியை கடந்துள்ளது. 'அனிமல்' பட வெற்றிக்குப் பிறகேஇந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக அவர் இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in