Published : 27 Nov 2023 01:21 PM
Last Updated : 27 Nov 2023 01:21 PM

‘காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது.

ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். டீசரில் கையில் திரிசூலத்துடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் தோன்றுகிறார் ரிஷப் ஷெட்டி. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x