சண்டைக் காட்சியில் விபத்து: நடிகர் ஆசிப் அலி காயம்

சண்டைக் காட்சியில் விபத்து: நடிகர் ஆசிப் அலி காயம்
Updated on
1 min read

கொச்சி: பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ அசோகன், லுக்மேன், சஞ்சனா நடராஜ், சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் படமான இதன் சண்டைக் காட்சி கடந்த வியாழக்கிழமை கொச்சியில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆசிப் அலியின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in