

தமிழில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன், அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்து, ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் ‘விஜய் 68’ படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருக்குப் பதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா மோகன், அங்கு பவன் கல்யாணுடன் ‘ஓஜி’,நானியுடன்‘ சூர்யாவின் சனிக்கிழமை’ படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.