

'ஆடு ஜீவிதம்' என்ற மலையாளப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஹ்மான் இசையமைக்கும் 2-வது மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
1992-ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' படத்திற்கும் ரஹ்மான் இசையமைத்தார்.
அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்தவர் ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றார். இந்நிலையில் தற்போது ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபிய பாலைவனத்தில் ஆடுகளை மேய்த்து வாழ்வாதாரத்திற்காக கடுமையான துன்பங்களை அனுபவிக்கும் இந்தியர் நஜீப் முகமதுவைப் பற்றிய கதைதான் 'ஆடு ஜீவிதம்'. ப்ளஸ்ஸி இயக்கும் இப்படத்தில் இதில் ஆடு மேயக்கும் நஜீப் முகமதுவாக ப்ரித்விராஜ் நடிக்கிறார்.