ஃபேஸ்புக்: தென்னிந்திய நடிகர்களில் அல்லு அர்ஜுன் முன்னிலை

ஃபேஸ்புக்: தென்னிந்திய நடிகர்களில் அல்லு அர்ஜுன் முன்னிலை
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கங்களில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் 50 லட்சம் லைக்குள் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வட இந்திய திரையுலக பிரபலங்களைத் தொடர்ந்து தென்னிந்திய திரையுலக பிரபலங்களும் இணைந்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் இணையத்தில் தென்னிந்திய நடிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் முதல் இடத்தினை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான >அல்லு அர்ஜுனின் பக்கம் முதலிடம் பிடித்துள்ளது. 50 லட்சம் லைக்குகளைக் கடந்திருக்கிறது அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ரேஸ் குர்ரம்' திரைப்படம், அவரது நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர்களில் >கமல்ஹாசன், >மோகன்லால், பிரபாஸ், >ஃபகத் ஃபாசில், ஜுனியர் என்.டி.ஆர், >ராம் சரண் உள்ளிட்டவர்களின் பக்கங்களை முந்திக் கொண்டு அல்லு அர்ஜுன் ஃபேஸ்புக் பக்கம் முன்னிலை வகிக்கிறது.

தமிழ் திரையுலக நடிகர்களில் கமல்ஹாசன் மட்டுமே தனது அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கம் இதுதான் என்று அறிவித்து இருக்கிறார். மற்ற முன்னணி நடிகர்கள் யாருமே அதிகாரப்பூர்வ பக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in