

கொச்சி: ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் பிரபல இலங்கை இயக்குநர் பிரசன்னா விதானகே இயக்கியுள்ள மலையாளப் படம், ‘பாரடைஸ்’. 2022-ம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்து எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை இலங்கையில் நாடு தழுவிய போராட்டம் வெடிக்க காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் தங்கள் திருமண நாளை கொண்டாட அங்குச் செல்லும் கேரள தம்பதிகள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் இதன் கதை.
ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே இசை அமைத்துள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் இந்தப் படம், தென் கொரியாவின் புசான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த படத்துக்காக வழங்கப்படும் ‘கிம் ஜெசோக்’ விருது இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.