

ஹைதராபாத்: நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வருவதாக அறிவித்தார். அதற்காகச் சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கும் அவர், சினிமாவுக்கு இடைவெளி விட்டுவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றவர், அங்குச் சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றி பகிர்ந்துள்ளார்.
‘‘இது, வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின்செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளைவலுவாக்குகிறது. இதயஅமைப்பு சரியாகச் செயல்பட வைக்கிறது, வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.