ஸ்ரீஜித்துக்கு நிவின் பாலி ஆதரவு: ட்விட்டரில் பதிவு

ஸ்ரீஜித்துக்கு நிவின் பாலி ஆதரவு: ட்விட்டரில் பதிவு
Updated on
1 min read

2 வருடங்களுக்கு மேல் போராடி வரும் கேரள இளைஞர் ஸ்ரீஜித்துக்கு மலையாள நடிகர் நிவின் பாலி தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

போலீஸ் காவலில் தனது சகோதரர் ஸ்ரீஜிவ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்ததையடுத்து கடந்த 2 வருடங்களாக திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு முன் போராடி வருகிறார் ஸ்ரீஜித்.

இவரது இந்த போராட்டத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது. மேலும், மாநில அரசும், சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மலையாள திரைப் பிரபலங்கள் ஸ்ரீஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஜித்தின் போராட்டம் பற்றி #JusticeForSreejith என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பதிவிட்டுள்ள மலையாள நடிகர் நிவின் பாலி,

"வேதனையான 762 நாட்கள். இதைப் பார்க்கும்போது மனமுடைகிறது. தனது சகோதரனின் மரணத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை ஸ்ரீஜித்துக்கு இருக்கிறது. இந்த தேசத்தின் ஒவ்வொரு தனிமனிதரைப் போல ஸ்ரீஜித்துக்கும், அவரது குடும்பத்துக்கும் நீதி கிடைக்க வேண்டிய உரிமை இருக்கிறது. நான் உன்னுடன் இருக்கிறேன் சகோதரா. உனது தனி மனிதப் போராட்டத்துக்கு பெரிய வணக்கங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in