இத்தாலியில் லாவண்யா திருமணம்

இத்தாலியில் லாவண்யா திருமணம்
Updated on
1 min read

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணத்துக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பது தெரியவந்துள்ளது. அங்குள்ள டசுக்கனி (Tuscany) நகரில் உள்ள ஆடம்பரமான ரிசார்ட் ஒன்றில் நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடக்கிறது. 3 நாட்கள் நடக்கும் இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in