இறைச்சிக்காக விலங்குகளை துன்புறுத்துவதா? - வேதிகா வேதனை

இறைச்சிக்காக விலங்குகளை துன்புறுத்துவதா? - வேதிகா வேதனை
Updated on
1 min read

கொச்சி: ‘மதராஸி' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா. பின்னர் 'முனி', சக்கரகட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் வேதிகா, இப்போது, விலங்குகளை இறைச்சிக்காகத் துன்புறுத்துவது போன்ற வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியா உட்பட உலகம் முழுவதும் இறைச்சிக்காக கோழிகள், பன்றிகள், மாடுகள் மற்றும் ஆடுகள் எவ்வாறு சித்திரவதை செய்யப்படுகின்றன என்கிற கசப்பான உண்மை இது. இறைச்சிக்காக விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. மனிதர்களை விட மரணம் அவற்றுக்குக் கனிவானது. இந்தப் படுகொலையின் ஒரு பகுதியாக நீங்கள் இன்னும் இருக்க விரும்புகிறீர்களா? விலங்குகளைக் கொல்வதற்கு நிதி வழங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். வன்முறையில்லாத சைவத்தைத் தேர்வு செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in