லிஜோ ஜோஸ் - மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி ரிலீஸ்

லிஜோ ஜோஸ் - மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி ரிலீஸ்
Updated on
1 min read

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

மோகன்லால், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது. இந்நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in