ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் விஜய் தேவரகொண்டா

ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் விஜய் தேவரகொண்டா
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: ‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நானும் மகிழ்வுடன் இருக்கிறேன். நான் சில விஷயங்களை யோசித்திருக்கிறேன். அது சரியா, தவறா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அதை நான் செய்யாவிட்டால் எனக்கு தூக்கம் வராது.

என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக ‘குஷி’ படத்தின் என் ஊதியத்திலிருந்து ரூ.1 கோடி ரூபாயை 100 ரசிகர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்த 10 நாட்களில் கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறேன். என்னுடைய வெற்றி, என்னுடைய சந்தோஷம், என்னுடைய சம்பளம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்தப் பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டு வாடகை அல்லது கல்விச் செலவு என எதற்காவது பயன்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன். அடுத்த 10 நாட்களில் ‘குஷி’ படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு இந்த தொகை 100 குடும்பங்களுக்கு சென்றடைந்துவிடும். இது நிறைவடைந்தால் தான் படத்தின் வெற்றியை எனக்கு முழுமையடையும்” என பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான ‘குஷி’ திரைப்படம் முதல் 3 நாட்களில் ரூ.70 கோடி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in