பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் ராஜமவுலி?

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் ராஜமவுலி?

Published on

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம், ‘கல்கி 2898 ஏடி’.அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முதல்தோற்றம் அமெரிக்காவில் நடந்த காமிக் கான் விழாவில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இப்போது பிரபல இயக்குநர் ராஜமவுலி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ராஜமவுலி, பாகுபலி உட்பட சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in