வெங்கடேஷின் ‘சைந்தவ்’ படத்தில் ஆர்யா - தோற்றம் வெளியீடு

வெங்கடேஷின் ‘சைந்தவ்’ படத்தில் ஆர்யா - தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு படமான ‘சைந்தவ்’ படத்தில் நடிகர் ஆர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அவரின் கதாபாத்திர தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் ‘ஹிட்’ பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு (Sailesh Kolanu). இவர் அடுத்ததாக ஹிட் கொடுக்க முயன்று தற்போது இயக்கிவரும் திரைப்படம் ‘சைந்தவ்’. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நவாசுதீன் சித்திக், ஆன்ட்ரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மனஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் பெயர் மற்றும் தோற்றம் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது மனஸ் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க உள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தோற்றத்தில் நீண்ட தலைமுடியுடன் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நடிகர் ஆர்யா நடந்து வருகிறார். இந்தத் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in