“லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படமல்ல” - விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

“லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படமல்ல” - விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்
Updated on
1 min read

ஹைதராபாத்: “லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படம் கிடையாது. பல தோல்விகளை பார்த்தவன் நான்” என்று நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா, “ஒரு படம் சரியாக போகவில்லை என்றால், அது நம்மை காயப்படுத்தும். ‘லைகர்’ ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படம் கிடையாது. கடந்த காலங்களில் நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். அதேபோல நான் பல்வேறு வெற்றிகளையும் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன்.

வெற்றி, தோல்வி இரண்டு அனுபவங்களையும் நான் பெற்றுக்கொண்டிருப்பேன். வெவ்வேறு வகையான கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆக்கபூர்வமான ஒன்றை பின்தொடர வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக என் வாழ்க்கையை அர்பணித்துள்ளேன். ஆம், ஒரு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால் அது வலியை ஏற்படுத்தும். நான் தோல்விகளை பார்த்து பயப்படுபவன் அல்ல. ஒரு படம் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து எனக்குள் வலியை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து முயற்சியை மேற்கொள்வதிலிருந்து என்னை எதுவும் தடுத்துவிடுவதில்லை. தடுமாற்றத்தை கண்டு நான் அஞ்சவில்லை” என்றார்.

மேலும், “என்னை ஏன் பெண் வெறுப்பாளர் என்று கூறுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை. என்னை நன்கு அறிந்தவர்களுக்கு நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பது தெரியும். நான் தற்போது என்னுடைய வாழ்க்கைத் துணையை தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்” என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in