

ஹைதராபாத்: கல்யாண் ராம், சம்யுக்தா நடிக்கும் படம், ‘டெவில்’. தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற ‘பிம்பிசாரா’ படத்துக்குப் பிறகு கல்யாண் ராம் நடிக்கும் படம் இது. இதில் அவர் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக நடிக்கிறார். தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. தேவன்ஷ் நாமா வழங்கும் இந்தப் படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்துள்ளார்.
நவீன் மேடாராம் இயக்கியுள்ள படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை காந்த் விசா எழுதியுள்ளார். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். பிரிட்டிஷ் காலத்தில் நடப்பது போன்ற கதையை கொண்ட இந்த ஸ்பை த்ரில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவ.24ம் தேதி வெளியாகிறது