

ஹைதராபாத்: நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள ‘குஷி’ படத்தை முடித்துவிட்டார். வருண் தவணுடன் இணைந்து நடித்த ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரையும் முடித்துவிட்டார். இதையடுத்து அவர் தசை அழற்சிக்கான மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இதனால் சில தயாரிப்பாளர்களிடமிருந்து தான் ஏற்கெனவே பெற்ற முன் பணத்தைத் திருப்பி அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் அமெரிக்கா செல்வார் என்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை சமந்தா மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தெலுங்கு சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த நடிகர் பெயரை வெளியிடவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.