மலையாள நடிகர் சுராஜுக்கு கொலை மிரட்டல்

மலையாள நடிகர் சுராஜுக்கு கொலை மிரட்டல்
Updated on
1 min read

கொச்சி: பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர், தனக்கு வாட்ஸ் அப் காலில் மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக காக்கநாடு சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்த சுராஜ் வெஞ்சரமூடு, கடந்த சில நாட்களுக்கு முன் ஆலுவாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் சிலர் திட்டியுள்ளனர்.

தெரியாத எண்களில் இருந்து அழைத்து அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். கடந்த 3 நாட்களாக இதுபோன்ற அழைப்புகள் வருவதாக அவர் போலீஸில் தெரிவித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in