நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கார் மோதி ஒருவர் காயம்

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கார் மோதி ஒருவர் காயம்
Updated on
1 min read

கொச்சி: பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று முன் தினம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். எர்ணாகுளம் பாலாரி வட்டம் பகுதியில் வந்தபோது எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மீது கார் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயம் அடைந்தார். அவர் கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்தவர் மலப்புரத்தைச் சேர்ந்த சரத் என்பது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீஸர் சுராஜ் வெஞ்சரமூடுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக மருத்துவமனை சென்று காயமடைந்தவரை சுராஜ் வெஞ்சரமூடு சந்தித்து ஆறுதல் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in