பாகுபலிக்குப் பிறகு பாகமதி: அனுஷ்காவின் அடுத்த படம் ஜனவரி 26-ல் வெளியீடு

பாகுபலிக்குப் பிறகு பாகமதி: அனுஷ்காவின் அடுத்த படம் ஜனவரி 26-ல் வெளியீடு
Updated on
1 min read

இரண்டு பாகங்களாக வெளியாகி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த 'பாகுபலி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் 'பாகமதி' திரைப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது.

இத்தகவலை, படத்தைத் தயாரித்து வரும் யூவி கிரியேஷன்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

'பாகமதி' படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் த்ரில்லர் படமாகும். இதில் அனுஷ்கா, 'ஈரம்' ஆதி, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட மலையாள நடிகர்களும் நடிக்கின்றனர்.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்குகிறார். தமன் இசையமைக்க, ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

'பாகமதி' படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது. இந்நிலையில் படம் ஜனவரி 26-அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து #Bhaagamathie என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in